கிளிநொச்சியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறாததால் மக்கள் அசௌகரியம்
கிளிநொச்சியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறாததால் தாம் அசௌகரியத்தை எதிர்கொள்வதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகில், A35 பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கான அபிவிருத்தி பணிகள் கடந்த 11.05.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும் குறித்த பணிகள் மந்தகதியிலே நடைபெறுவதனால் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
07.11.2021ஆம் திகதியுடன் இப்பாலத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இன்றுவரை பாலத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையவில்லை.
இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தினை விரைவாக
பூரத்தி செய்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
