கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக இரணைதீவு அடையாளம்
கோவிட் - 19 நோய்த்தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்தற்கு பொருத்தமான இடமாக இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி கோவிட் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam