அனைத்து குற்றங்களுக்கும் அருந்திகவே முன்னோடி:உடுவே தம்மாலோக்க தேரர்
ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka Thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள்,மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை.
அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. எனினும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யப்படுவதை அருந்திக பெர்னாண்டோ தலையிட்டு தடுத்தார் எனவும் உடுவே தம்மாலோக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
