வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வழங்கியுள்ள அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமென வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் தொடரின் கிழக்கு மாகாண நிகழ்வு நேற்று (09.11.2026) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நாட்டின் எதிர்கால முன்னேற்றம்
இதில் வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது.
இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது தேசிய ஒற்றுமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நிர்ப்பந்திக்கப்படும் நிலை உருவாகக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தேசிய இளைஞர் கொள்கையின் பின்னணி, அதன் அவசியம், கொள்கை உருவாக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் காலவரையறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் இளைஞர் விவகாரங்களுக்கான உதவிப் பணிப்பாளர் நிமேஷ் சிவங்கரவால் விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


ஈரானியர்களுக்கு வழங்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகள்... அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் அதிகரிப்பு News Lankasri
4 வயது சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம் News Lankasri