சிவாஜிலிங்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இராமநாதன் அர்ச்சுனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna M. K. Shivajilingam Sri Lankan Peoples Dr.Archuna Chavakachcheri
By Kajinthan May 27, 2026 04:58 AM GMT
Report

புலம்பெயர் தமிழர்கள் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூச்சலிடுவதாக சாவகச்சேரி நகரசபையின் உப நகர பிதா ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மருத்துவ செலவிற்கு சேகரிக்கப்படும் நிதி குறித்த இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு

அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு

மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பு

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை.

சிவாஜிலிங்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இராமநாதன் அர்ச்சுனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Aruchuna Unnecessary Comments Sivajilingam Warning

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிவாஜிலிங்கம் அவர்களின் மருத்துவ செலவிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவது குறித்து மிக மோசமான கருத்தை முன்வைத்துள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா இந்த மண்ணுக்கோ அல்லது மக்களுக்கோ ஒரு துளி கூட நன்மை செய்யாத ஒருவர். மக்களை ஏமாற்றி அரசியலுக்கு வந்து புலம்பெயர் மக்களிடம் கோடிக்கணக்கான நிதியை திரட்டி சொகுசு வாழ்க்கை வாழ்கின்றவர் இராமநாதன் அர்ச்சுனா.


ஆகவே அவர் தன்னைப்போல் மற்றவர்களையும் சிந்திக்கின்றார். புலம்பெயர் தேசங்களில் இருந்து சிவாஜிலிங்கத்திற்கு நிதி அனுப்பினால் தனக்கு நிதி கிடைக்காது என்ற கோபத்தில் அவர் இவ்வாறான மோசமான வேலைகளை செய்கிறார்.

இராமநாதன் அர்ச்சுனா, வெளிநாட்டுக்குச் சென்று அங்கே நின்று எமது மண்ணையும், எமது இளைஞர்களையும் விற்கின்ற வகையில் கருத்து தெரிவித்தபோது நாங்கள் பகிரங்கமாக ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.

அதாவது எமது யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு தயாரா என்று நாம் கேட்டிருந்தோம். அவர் வரவில்லை. அவருக்கு முதுகெலும்பு இல்லாததால் தான் விவாதத்திற்கு வரவில்லை. மீண்டும் நாங்கள் கேட்கின்றோம் அர்ச்சுனா இராமநாதனுக்கு துணிவு இருந்தால், முதுகெலும்பு இருந்தால் யாழ்ப்பாண இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள். நீங்கள் சொல்கின்ற இடத்திற்கு எமது இளைஞர்கள் வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

முன்வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகள்

அத்துடன் மேலும் ஒரு பகிரங்க கோரிக்கையை முன்வைக்கிறோம். முடிந்தால் இன்னொரு தடவை தமிழக மண்ணில் கால் வையுங்கள் பார்ப்போம். நீங்கள் முதுகெலும்பு உள்ள ஒரு ஆளாக இருந்தால் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் சம்மதியுங்கள் பார்ப்போம்.

தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிவிட்டார்கள். அந்த வாழ்க்கையை ருசித்துக் கொண்டு மீண்டும் முதலமைச்சர் ஆகுவதற்கு பகல் கனவு காணுகின்றார்.

சிவாஜிலிங்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இராமநாதன் அர்ச்சுனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Aruchuna Unnecessary Comments Sivajilingam Warning 

அமிர்தலிங்கம், தந்தை செல்வா உள்ளிட்ட கல்விமான்களின் வழிவந்த எமது அரசியலானது தற்போது அர்ச்சுனா போன்றவர்களால் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருப்பது எமக்கு வெட்கக்கேடாக இருக்கின்றது.

அர்ச்சனா இராமநாதன் என்ற ஒருவரை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வைத்தியர் என்ற பெயரில் இருக்கின்ற இந்த விஷச்செடியினை அறிமுகப்படுத்தியதற்காக எமது மக்களிடம் நாங்கள் பகிரங்க மன்னிப்புகோருகின்றோம்.

சிவாஜிலிங்கம் குறித்து அர்ச்சுனா என்கின்ற விஷக்கிருமி ஏதாவது கருத்துக்கள் முன்வைத்தால் நடப்பது வேறு. இதனை பகிரங்க எச்சரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். எந்த பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிட்டாலும் பிரச்சினை இல்லை.

சிவாஜிலிங்கம் இரண்டு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தினை விடுதலை போராட்டத்திற்காக வழங்கியவர். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் சொகுசாக வாழவில்லை.

2013ஆம் ஆண்டு சிவாஜிலிங்கம் நினைவேந்தலில் ஈடுபடும்போது இராணுவத்தினர் அவரை சூழ்ந்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் பெரிய கோவிலில் நினைவேந்தலில் ஈடுபடுகின்றபோது இராணுவத்தினர் அங்கே வந்த அந்த சுடர்களை கால்களால் தட்டி அவமானப்படுத்தினார்கள்.

கெடுபிடியான நேரத்திலும் நினைவேந்தல்

அன்று இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்கள் மத்தியில் மாகாணசபை வளாகத்தினுள் தனி ஒருவராக நின்று நினைவேந்தலை மேற்கொண்டவர். இன்று நாங்கள் தேசியத்தலைவரின் பிறந்த நாளுக்கு பகிரங்கமாக கேக் வெட்டுகின்றோம். ஆனால் அன்று கெடுபிடியான நேரத்திலும் கேக் வெட்டியவர் தான் சிவாஜிலிங்கம்.

இறுதி நேரத்தில் தேசியத்தலைவரின் தாயாரது மருத்துவ விடயங்கள், இறுதிச்சடங்கினை சிவாஜிலிங்கம் தான் நடாத்தினார். தமிழ் தேசியத்துக்காக இவை அனைத்தையும் துணிந்து செய்தவருக்கு எதிர்பார்த்த அளவு நிதியை விட அதிகமான நிதி கிடைக்க வேண்டும்.

இன்றைக்கு அவர் இந்த நிதியை கேட்டிருக்கமாட்டார். அவருடன் இருந்தவர்கள் வற்புறுத்தியதாலேயே அவர் இதனை கேட்டுள்ளார்.

அவரது மருத்துவ செலவுக்கு மாத்திரமன்றி அவரது பராமரிப்பு செலவுக்கும் தேவையான நிதி கிடைக்க வேண்டும். எனவே அவருக்கு கிடைக்கின்ற நிதி குறித்து யாரும் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US