கலைப்போராளி சண் மாஸ்டர் கனடாவில் மரணம்!
கலைப்போராளியாகப் பயணித்த சண் மாஸ்டர் அழைக்கப்படும் சண்முகம் கிற்லர் கனடாவில் மரணமடைந்த செய்தி ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டிற்கும் மேலாக எம்முடன் கலைப்போராளியாப் பயணித்த சண் மாஸ்டர் எழுத்துகளிலிருந்த படைப்புகளுக்கு உயிர் கொடுத்து அரங்கேற்றியவர் என்பதுடன், பல கலைஞர்களையும் உருவாக்கியவர்.
நடிகனாகவும் கூத்துக் களத்தில் கூத்தாடியாகவும் எழுதப்பட்டிருக்கும் ‘பா’ வரிகளுக்கு மெட்டமைக்கும் இசை அமைப்பாளராகவும், பாடல் ஆக்கும்பொழுது பாடகராகவும் மாறும் ஒரு பல்கலை வித்தகரான சண் மாஸ்டரின் பிரிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது நாடகம், வில்லுப்பாட்டு, தாளலயம் என எண்ணிலடங்காப் படைப்புகளைக் கலை பண்பாட்டுக்கழகம் அரங்கேற்றியது.
தனக்கே உரித்தான ஆளுமையான குரலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொழுது மக்களைத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்த்ததுக் கொள்ளுமவர், விளையாட்டுத்துறையினூடாகப் பல இளைஞர்களைச் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கியவர்.
பல்துறை சார்ந்து தமிழ்த் தேசியத்தின் பால் பயணித்த கலைப்போராளியான சண்மாஸ்டரின் பிரிவில் இன்று ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல உலகவாழ் தமிழர்களும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
மறைந்த கலைத்துறைப் போராளியான சண் மாஸ்டருக்கு கலைஞர்கள், ஈழத்து எழுத்தாளர்கள், புலம்பெயர் உறவுகளமைப்புகள், படைப்பாளிகள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்த வருகின்றனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
