வெயில் கொளுத்தும் நிலையில் வயல்களுக்கு தீ வைப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் வாய்ப்பு
அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam