வவுனியாவில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியிலிருந்து பம்பைமடுவிற்கு பசுமாடு கடத்தி சென்ற இரு சந்தேகநபர்களை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு இலட்சத்தி பதின்நான்காயிரம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை கடத்தி பம்பைமடுவிற்கு நடாத்திக்கூட்டிக்கொண்டு சென்றபோது அப்பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் மறவன்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் திருட்டு
வவுனியா மன்னார் வீதி இரண்டாம் கட்டைப்பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள், பணம் என்பன திருட்டு போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் வைக்கப்பட்ட தங்க சங்கிலி, தோடு, ஐம்பதாயிரம் பணம் என்பன திருட்டுப்போயுள்ளது. கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளரான ஆசிரியரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவ்வீட்டில் பணியாற்றிய சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணை கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டபோது திருடப்பட்ட தங்க நகை, பணம் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மேலும்
தெரிவித்துள்ளனர்.



