நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சூரிய புர மற்றும் தோப்பூர் பகுதிகளில் நகைகளை கடத்த முயன்றதாக கூறப்படும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் சூரிய புர பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து 60 இலட்சம் நகைகளை கடத்திச் சென்ற ஒருவரை நேற்று (23.01.2023) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்த முச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
அதேவேளை, கந்தளாய் தோப்பூர் பகுயில் 50 இலட்சத்துக்கும் பெறுமதியான நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரின் கையில் மறைத்து வைத்திருந்த பை குறித்து சந்தேகமடைந்த பொலிஸார், அதை சோதனையிட்டபோது தங்க ஆபரணங்கள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் மூதூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டு சம்பவத்துடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பின்னர் மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri