யாழில் இரண்டு கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரால் கைது
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பின் போது போயா தினமான நேற்று காலை 2 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வட்டுக்கோட்டை மற்றும் திவிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா வியாபாரத்தை மேற்கொண்டு வந்த நபர்கள் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
