வெளிநாட்டில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல் தலைவர் - ஆபத்தான ஆயுதங்களுடன் இலங்கையில் சிக்கிய நபர்
வெளிநாட்டில் வசிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான "ஹீனட்டியன மகேஷின்" உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஜிங்கா" என்ற புனைப்பெயரில் அறியப்படும் சந்தேகநபர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 25 T-56 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மினுவாங்கொட, அங்கொட, ஹீனட்டியன மற்றும் கட்டுநாயக்க போன்ற பகுதிகளில் கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.