போலி விசாவில் வெளிநாடு செல்ல முயற்சித்த யுவதி உட்பட மூன்று பேர் கைது
பொய்யான தகவல்களை உள்ளடக்கி போலியாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு செல்ல முயற்சித்த மூன்று இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் கட்டார் நாட்டின் தோஹா நகருக்கு புறப்பட்டுச் செல்லும் நோக்கில் இன்று அதிகாலை 3.15 அளவில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த மூன்று பேரில் இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆண்கள் எனவும், முள்ளியவளை சேர்ந்த 26 வயதான யுவதியும்,வல்வெட்டித்துறையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குகின்றனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் நகரத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் தோஹாவில் இருந்து இங்கிலாந்து சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இந்த நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தின் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9