தமிழ் ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis Journalists In Sri Lanka
By Thulsi Sep 23, 2023 04:51 AM GMT
Report

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அறிக்கையிடச் சென்ற முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை, அச்சுறுத்தி இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் வகையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் டி.பிரதீபன், நான்கு வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை அச்சுறுத்திய கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் (21.09.2023) பிடியாணை பிறப்பித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 2009 இல் முடிவடைந்த கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், தங்கள் அன்புக்குரியவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பலவந்தமாக காணாமல் போனதன் பின்னர், 2,400 நாட்களுக்கும் மேலாக தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் உறவுகளை தேடும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Arrest Warrant Intelligence Officer Journalist

நீதி கிடைக்காது உயிரிழப்பு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 180 உறவினர்கள் நீதி கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில், 2019 ஏப்ரல் 07ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து, வட்டுவாகல் பாலம் வரை சென்ற, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கண்டன ஊர்வலத்தை முல்லைத்தீவு ஊடக மையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் அறிக்கையிட்டுக் கொண்டிருந்தார்.

அவரும் ஏனைய ஊடகவியலாளர்களும் போராட்டத்தை அறிக்கையிட்டுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களை படம் பிடித்தார்.

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி

இனந்தெரியாத நபர் படமெடுப்பதை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, ஊடகவியலாளர் தவசீலன் குறுக்கிட்டு, அந்த நபர் யார், எதற்காக போராட்டத்தை படமெனடுக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நபர், போராட்டக்காரர்களால் துரத்திச் செல்லப்பட்டு பிடிக்கப்பட்ட பின்னர் தான் கடற்படை அதிகாரி என்பதை ஒப்புக்கொண்டார். சம்பவ இடத்திற்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் சமூகமளிக்கவில்லை.

தமிழ் ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Arrest Warrant Intelligence Officer Journalist

எனவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இவரை கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதையடுத்து, அவர் கடற்படை அதிகாரி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். முகாமிற்கு வந்த பொலிஸாரிடம் இவரை ஒப்படைத்த போராட்டக்காரர்கள் பின்னர் திரும்பிச் சென்றனர்.

அதன் பின்னர் கடற்படை அதிகாரியும் அவரது சாட்சியாக வந்த மற்றுமொரு கடற்படை அதிகாரியும் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான தகவல்களை முன்வைத்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)


பழிவாங்கும் செயலாகும்

முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸார் ஊடகவியலாளர் தவசீலனை வரவழைத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவித்தனர்.

இது தொடர்பான வழக்கு 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரரான கடற்படை புலனாய்வு அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

தமிழ் ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Arrest Warrant Intelligence Officer Journalist

இதற்கமைய, கடற்படை புலனாய்வு அதிகாரி மற்றும் அவரது சாட்சியாக பொலிஸில் முறைப்பாடு செய்த மற்றைய அதிகாரியும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் டி.பிரதீபன் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாடு செய்த கடற்படை புலனாய்வு அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

குறித்த அதிகாரியை 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜா அன்றைய தினம் அழைப்பாணை விடுத்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் பெப்ரவரி 29, 2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளுக்கு விசாரணை இடம்பெறுமா (VIDEO)

சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளுக்கு விசாரணை இடம்பெறுமா (VIDEO)

ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக கடற்படை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு "வெறும் பழிவாங்கும் செயலாகும்" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், நாட்டின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் அரச அனுசரணையுடன் கூடிய குற்றங்கள் உட்பட தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US