இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு(Ramanathan Archchuna) பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிடியானையானது யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பேஸ்லைன் வீதியில், 2021 மார்ச் 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காருடன் மோதி விபத்து
இதன்போது தனது காருடன் மோதி விபத்துக்குள்ளான மற்றுமொரு காரின் வாகன சாரதியைத் கடுமையாகக் தாக்கி காயப்படுத்தியதாகக் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்த காரணத்தினால் அவருக்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan