வெலிகம நகர சபைத் தலைவருக்கு பிடியாணை
வெலிகம நகர சபைத் தலைவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெலிகம நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டதுடன், சபையின் முதல்வராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்கிரமசேகர தெரிவு செய்யப்பட்டார்.
நகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் செயற்பாட்டின் போது தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக லசந்த விக்கிரமசேகர மீது முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிடியாணை
குறித்த வழக்கில் வெலிகம நகர சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(12) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது லசந்த விக்கிரமசேகர நீதிமன்றத்தில் முன்னலையாகவில்லை. அத்துடன் அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை.
அதனையடுத்து வெலிகம நகர சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
