மக்களின் பிரச்சினையை தீர்க்க நாங்கள் போராடுவோம் - முஸர்ரப் எம்.பி.

Politics Parliament Arrest Rishad Bathiudeen Pervez Musharraf
By Varunan May 10, 2021 10:41 AM GMT
Report

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின்  கைதை கண்டித்தும், எமது துக்கத்தை வெளிக்காட்டும் முகமாகவும் எதிர்வரும் பெருநாள் தினத்தன்று   கறுப்பு கொடியை பறக்க விட்டு கட்சி பாகுபாடுகள் இல்லாத சகோதரத்துவத்தை வலியுறுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி முஸர்ரப் முதுனபீன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

மாகாண சபை கனவில் இருக்கும் சில கட்சி முக்கியஸ்தர்களும் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்பட பலரும் புனிதம் மிக்க நோன்பு கால மாண்பையும் மீறி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இவர்கள் இறைவனுக்கு பயந்து கொள்ளட்டும் என இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.


மேலும், தலைவரின் கைது தொடர்பில் வீணாக படம் காட்டுவோர் மத்தியில் உளத்தூய்மையோடு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறேன். என்னுடன் இணைந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, எ.எல்.எம் அதாஉல்லா எம்.பி உட்பட பலரும் உரத்த குரலில் குரல் எழுப்பி வருகிறோம்.

தலைவர் உட்பட அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தலைவர்கள், பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானமுள்ள எல்லா முஸ்லிம்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்பிக்கள், அரச தரப்பு முக்கியஸ்தர்கள் போன்றோர்களை சந்தித்து இந்த சமூகத்தின் தேவைகள் தொடர்பிலும் பிராந்திய ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்தின் இக்கட்டான அரசியல் சூழ் நிலைகள் தொடர்பிலும் பேசி வருகிறோம்.

இது தொடர்பில், பகிரங்கமாக ஊடகங்களுக்கு சமூக நலன் கருதி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை இதற்காக விமர்சிப்பவர்களை பற்றி நாங்கள் கவலைப்பட போவதுமில்லை .

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரணி தொடர்பில் எனக்கு இருந்த மாறுபட்ட கருத்துக்கள் காரணமாகவே நான் அதில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் அண்மைய சாணக்கியன் எம்.பி இன் நாடாளுமன்ற உரை கல்முனையின் அந்த அரச காரியாலயங்கள் தொடர்பிலான போதியளவு அறிவின்மை காரணமாகவே என நான் விளங்குகிறேன்.

பொத்துவில் மக்கள் அவர்களுடைய பணத்தை செலவளித்து அவர்களுடைய அன்பினூடாக என்னை நம்பி வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி உள்ளார்கள். மேலும் அம்பாறை மாவட்ட மக்களும் என்னை நம்பி வாக்களித்துள்ளார்கள் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியே தீர்வை பெற முடியும் அதை விடுத்து எதிர் அணியில் அமர்ந்து கொண்டு கோசம் எழுப்புவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது.

அ.இ.ம.கா என்பது ரிசாட் பதியுதீன் அவர்களுடைய தலைமைத்துவத்தை நாடி இருக்கும் கட்சி. மக்கள் காங்கிரஸின் அடையாளம் அவரே. அவர் மக்கள் காங்கிரஸ் இல்லாது வேறு புதியதொரு கட்சியை உருவாக்கினாலும் புதிய சின்னத்தை அறிமுகம் செய்தாலும் மக்கள் அவரை ஆதரிப்பார்கள்.

அவர் சிறையில் இருந்தாலும் மக்கள் காங்கிரஸின் தலைவர் அவரே. இருந்தாலும் அண்மையில் கட்சியில் அரசியல் பீடத்தின் பெரும்பான்மையோர் எடுத்த முடிவுக்கு நான் கட்டுபடுகிறேன் என்றும் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US