24 மணித்தியாலத்தில் 1038 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால், 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது தடவையாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானோர் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், இங்கு 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 130 பேரும், மாத்தறை பிரதேசத்தில் 79 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20,140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.