மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட கதி
மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்திய இராணுவ லெப்டினண்ட் கேணல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் மின்சார கட்டணத்தைச் செலுத்தாத நிலையில், அதனைத் துண்டிக்க வந்த ஊழியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (26.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில், மின்கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக மின்சார சபை ஊழியர்கள் சென்றுள்ளனர்.
இராணுவ லெப்டினன் கேணல் கைது
இதன்போது அந்த வீட்டின் உரிமையாளரான இராணுவ அதிகாரி, மின்சார சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, கடுமையாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, மின்சாரசபை ஊழியர்கள் திவுலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்பேரில் குறித்த இராணுவ லெப்டினன் கேணல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் இலங்கை இராணுவ பீரங்கி முகாமில் கடமையாற்றும் லெப்டினன்ட் கேணல் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |