மன்னாரில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரிக்கும் முகமாக தள்ளாடி 54 வது காலாட்படை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி கரப்பந்தாட்ட வெற்றி கிண்ண இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம்(04) மாலை மன்னார் நகர சபை உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
விளையாட்டு துறையை ஊக்குவிக்கும்
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய அணிகளும் அதே நேரம் இரண்டு இராணுவ அணி என இடம் பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணி மற்றும் தள்ளாடி இராணுவ B அணியும் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் அவர்களுக்கான போட்டியே இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் முகமாகவும், ராணுவம், பொதுமக்கள், அரச அதிகாரிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
