வாகன விபத்தில் இராணுவ அதிகாரி பலி
மொனராகலை வெல்லவாய-எல்ல வீதியில் அம்பவத்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியை கடக்க முயற்சித்த நாய் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் பயணம் செய்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பகல்ல என்ற பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான இராணுவ சார்ஜன்ட் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
