முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவம், புலனாய்வாளர்கள் கெடுபிடி
முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மாவீரர் நாளிலை அனுஷ்டிக்கும் முகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் வர்த்தக நிலைய பெயர்ப்பலகையில் காணப்படும் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
மாவீரர் நாளான இன்றையதினம் உயிர்நீத்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவில் கொண்டு தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இராணுவத்தினரின் ,புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக சில வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நகரத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ஒவ்வொரு சந்திகள்
கடைகள், கடற்கரை பகுதிகளில் ஆயுதம் ஏந்திய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.





நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam