அமெரிக்க இராணுவம் ஆயுதங்களுடன் பிரவேசிக்கும் நிலை! விசேட புலனாய்வு அணியை உருவாக்கிய இலங்கை(Video)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் இராணுவதிற்கும் இடையில் காணப்பட்ட விரிசல் நிலை தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இராணுவதிற்கும் இடையில் இல்லை என புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,ரணில் கை அசைத்தால் இராணுவம் எந்த நிலைக்கும் தள்ளப்படலாம். ஜனாதிபதி அடிக்கடி அரச புலனாய்வாளர்களை பின்பற்றி வருகின்றார். அவர்களும் தகவல் கொடுப்பதால் இராணுவதிற்கும் ஆட்சிக்கும் ரணிலுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை.
தற்போது ரணில் விசேட தேர்தல் ஏற்பாடு சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளார் .அதனால் நாட்டில் சில கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே முப்படைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை இராணுவ உயர் தரப்புடன் நல்ல உறவை பேணுவதுடன் அமெரிக்க இராணுவம் ஆயுதங்களுடன் இலைகைக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து செல்ல கூடிய நிலைமை உள்ளது.‘‘என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |