நாடெங்கிலும் இராணுவ முகாம்களில் ஆயுதங்கள் கணக்கெடுப்பு
நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்களில் களஞ்சியப்படுத்தபட்டுள்ள அனைத்து ஆயுதங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
இது சிக்கலான மற்றும் நேரம் பிடிக்கும் செயல்முறை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆயுதத்தின் தொடர் எண்கள் மற்றும் பொறுப்புக் குறிப்புகளை சரிபார்க்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு முடிந்த பின் எந்த வகை ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன என்பது துல்லியமாக கண்டறிய முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவ முகாம்களில் காணப்படும் ஆயுதங்கள் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாயாகக்வும் கருத:து வெளியிட்டிருந்தார்.
ஒரு இராணுவ முகாமில் இருந்து 73, ரி56 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும், அவை தற்போது பாதாள கும்பல்களின் கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இராணுவ முகாம்களில் காணப்படும் ஆயுதங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கையிடப்பட உள்ளது.




