வவுனியாவில் கோவிட் தீவிரமடைந்ததையடுத்து தொற்று நீக்கும் செயற்பாட்டில் இராணுவம்
கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து வன்னி பாதுகாப்புப்படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினர் வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம்
முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam