படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படையினருக்கு பதவி உயர்வுகள்
தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.
பதவி உயர்வுகள்
குறித்த பதவி உயர்வு இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம் கடற்படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் 1256 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
விமானப்படையிலும் 12 அதிகாரிகள் மற்றும் 848 சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தின் 10,093 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
