இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கைது!
பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்ல முயற்சித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவிசாவளை பிரதான பஸ்தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி ஒன்றை அபகரித்துச் செல்ல முயற்சித்த போது இராணுவ சார்ஜன் மேஜர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியையே இவ்வாறு அறுத்துச் செல்ல இராணுவ அதிகாரி முயற்சித்துள்ளார்.
தங்கச் சங்கிலியை கொள்ளையிட முயற்சித்த காரணத்தினால் அந்தப் பெண்ணின் கையில் இருந்த 10000 ரூபா பெறுமதியான செல்லிடப்பேசியும் சேதமடைந்துள்ளது.
எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
