காலிமுக வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டு! சவேந்திர,விக்ரமரட்னவிடம் வாக்குமூலம்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரட்ன் ஆகியோர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இராணுவத் தளபதியும், பொலிஸ் மா அதிபரும் இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை (மே 09) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலைகளின்போது பாதுகாப்பு விதிகளை பேணத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கவே இந்த இருவரும் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பில் இரண்டு பிரதான அரசாங்க எதிர்ப்புப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் நாட்டில் பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின்; வாக்குமூலங்கள்; பதிவு செய்யப்படவுள்ளன
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        