வவுனியாவில் இராணுவத்தின் பேருந்து - முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
வவுனியா(Vavuniya), ஏ9 வீதியில் இராணுவத்தின் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று (31) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் படுகாயம்
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஏ9 வீதி ஊடாக அநுராதபுரம் நோக்கி பயணித்த இராணுவத்தினரின் பேருந்து ஒன்று மூன்றுமுறிப்பு பகுதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |