இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதிநாளை அடைந்துள்ள பேரணி (Live)
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி இறுதி நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற உள்ள நிலையில் மட்டக்களப்பில் பேரணிக்கு அமோக ஆதரவு மக்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெருகல் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமானது.
புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
கதிரவெளி மக்களால் பேரணிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வெடி கொளுத்தி தேங்காய் உடைத்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கிறிஸ்தவ இந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல பிரதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்நிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதி நாள் இன்றாகும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றைய தினம் வெருகல் முருகன் ஆலயத்திலிருந்து குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
