நள்ளிரவில் வந்த புலிகளின் ஆயுதக் கப்பல்! தடுக்கவேண்டாம் என்று கட்டளையிட்ட இந்திய அமைச்சர்
1997ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கத்தில் 'ஒப்பரேசன் ஜெயசிக்குறு' என்றொரு படை நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை இராணுவம்.
சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் நடைபெற்ற அந்தப் பாரிய படைநடவடிக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதிகள் இலங்கை படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்திருந்தன.
விடுதலைப் புலிகள் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருந்தார்கள். 1988ம் ஆண்டே ஒரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்கும்படியான நெருக்கடி அங்கு வந்திருந்தது.
ஆனால் 1999ம் ஆண்டு ஜனவரியில் அதிரடியாக விடுதலைப் புலிகள் நடாத்திய பதில் தாக்குதல் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தை வன்னியை விட்டு கிட்டத்தட்ட முற்றாகவே விரட்டியடித்திருந்தார்கள் விடுதலைப் புலிகள்.
சுமார் 2 வருடங்களாக இலங்கைப் படைகள் மேற்கொண்ட நகர்வை வெறும் ஐந்தே நாட்களில் முறியடித்திருந்தார்கள் விடுதலைப் புலிகள்.
விடுதலைப் புலிகளின் அந்த பெரு வெற்றிக்கு அப்பொழுது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சாராக இருந்த ஜோர்ஜ் பெர்ணான்டசும் ஒரு காரணம் என்று கூறுகின்றார்கள் சில இராணுவ திறனாய்வாளர்கள்.
மிகவும் இரகசியமாக இருந்து வந்த அந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்'; நிகழ்ச்சி: