பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு
ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக வங்கி
குறித்த விடயம் தொடர்பாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |