இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியின் நடவடிக்கைக்கு விருது வழங்க வேண்டும்
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளுக்காகப் பதக்கங்களை வென்ற போதிலும், ஒரு கனிஸ்ட நிலை அதிகாரி கௌரவ பதவிக்காகக் கவனிக்கப்படவில்லை என சண்டிக்கார் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் அவர் சேவை செய்தமைக்கான, பதிவேடு பதிவு அலுவலகத்தில் இல்லை என்ற காரணத்தினால் அவர் ஒன்பது ஆண்டுகள் தமது கௌரவ பதவிக்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியேற்ப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு உதவும் வகையில், இந்திய சண்டிகர், சண்டிமந்திரில் அமைந்துள்ள ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் அமர்வு, குறித்த இராணுவ அதிகாரியின் சேவைகளைப் பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் தேவையான உத்தரவை நிறைவேற்றுமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பரிந்துரைக்கான படிவம்
ஹிமாச்சல் பிரதேசம்- பாலம்பூரில் வசிக்கும் ரமேஷ் குமார், 1984இல் இராணுவத்தில் சேர்ந்து, 1989ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 1990ஆம் ஆண்டு பெப்ரவரி வரை, இலங்கையில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினார்.
முன்மாதிரியான சேவையை ஆற்றி, சுபேதார் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கௌரவ பதவி வழங்குவதற்கான பரிந்துரைக்கான அவரது படிவம், 2013ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று அவரது கட்டளை அதிகாரியால் நிரப்பப்பட்டுக் கையொப்பமிடப்பட்டுள்ளது.
சண்டிக்கார் தீர்ப்பாயம்
அவர் 2014ஆம் ஆண்டிற்கான கௌரவ பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
இருப்பினும், விருது பெற்றவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை.
இந்தநிலையில், பதிவுகள் கிடைக்கவில்லையென்றால், அது விண்ணப்பதாரரின் பொறுப்பு அல்ல, அந்த கடமை இந்திய ஒன்றியத்தால் செய்யப்பட வேண்டும் என்று சண்டிக்கார் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
எனவே, விண்ணப்பதாரர் வழங்கிய சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு, மூன்று மாதங்களுக்குள் அவர் தொடர்பிலான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பாயம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
