அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்த அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்வதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது ஒரு எளிய நடைமுறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (24.02.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகேந்திரன் இல்லாதபோதும் அவருக்கு எதிரான வழக்குகள் நடந்து வருகின்றன. நாங்கள் அவருக்கு எதிரான வழக்குகளைத் தொடர்கிறோம்.
வழக்குகள் தொடரும்
அவரை நாடு கடத்த அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்கிறது. இது ஒரு எளிய நடைமுறை அல்ல. அவர் நாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் வழக்குகளைத் தொடர்வோம்.

அவரை விரைவில் வீழ்த்துவதற்கு நாங்கள் ராஜதந்திர தலையீட்டை மேற்கொள்கிறோம். பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பான எவரும் தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |