பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுப்பர்: அரியநேத்திரன் நம்பிக்கை

Vavuniya P Ariyanethran Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Thileepan Sep 07, 2024 08:37 PM GMT
Report

பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையிலே நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(07) பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்


ஜனாதிபதித் தேர்தல்

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த தேர்தலின் ஊடாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் சர்வதேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் அயல் நாடான இந்தியாவுக்கும் ஒரு செய்தியை சொல்ல இருக்கின்றோம். 

பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுப்பர்: அரியநேத்திரன் நம்பிக்கை | Ariyanethran Speech At Vavuniya

கடந்த 75 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட இனம் இனியும் ஏமாறுவதற்கு தயார் இல்லை என்பதே ஆகும்.

ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட உள்ள அந்த தென்பகுதியைச் சேர்ந்தவருக்கு தாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றோம் என்ற மனசாட்சி அவர்களுக்கு உறுத்தும்.

பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையிலே நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஒரு நடவடிக்கையை அவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அதற்கு அப்பால் சிதறி கிடக்கின்ற எமது தமிழ் தேசிய கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு ஒரு முன்னேற்பாடாகவும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு எடுத்து இருக்கின்ற முயற்சி என்பது பயனளிக்கும்.

பத்தாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுப்பர்: அரியநேத்திரன் நம்பிக்கை | Ariyanethran Speech At Vavuniya

ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விடயம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே பலருக்கு வாக்களித்து இருக்கின்றோம், பேசியிருக்கின்றோம், ஏமாந்தும் இருக்கின்றோம்.

ஆகவே இம்முறை நாங்கள் கூறுகின்ற விடயம் ஜனாதிபதியாக ஒரு தமிழர் ஜனாதிபதியாக வர முடியாது என்றாலும் கூட எம்மை புறக்கணித்து 13 வது அரசியல் திருத்தத்தை கூட செய்யாது, யுத்த குற்றத்திற்கு சர்வதேச விசாரணை செய்யாமல் உள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் கைது

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் கைது

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் : வெளியான காரணம்

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் : வெளியான காரணம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US