அப்படியொன்றும் நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மறுத்த மஹிந்த! காணொளி இருப்பதாக பதிலடி கொடுத்த எதிர்க்கட்சியினர்
இலங்கையில் இன்று அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பேரூந்துகளில் வருவோா் இறக்கப்பட்டு சோதனையிடப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பில் விளக்கமளிக்குமாறு எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோாினாா்.
எனினும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமா் கூறியபோதும் எதிா்க்கட்சியினா், அதனை மறுத்து தம்மிடம் காணொளி ஆதாரங்கள் உள்ளதாக தொிவித்தனா்.
நாட்டின் மக்கள் இன்று எதிா்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொணருவதற்காக ஏற்படுத்தப்பட்டு சந்தா்ப்பத்தை மறுப்பது ஜனநாயகமாகாது என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினாா்.
முன்னதாக மஹிந்த ராஜபக்ச, பாதயாத்திரை சென்றபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டாா்.
நாட்டில் இன்று நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகளை நிராகாித்து சரத் வீரசேகர, மாற்று உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாக இதன்போது எதிர்க்கட்சியினா் சுட்டிக்காட்டினா்.
நாட்டில் இன்று நீதியமைச்சா் அலி சப்ரியின் சட்டம் ஒன்று உள்ளது. ஞானசார தேராின் சட்டம் ஒன்று இருக்கிறது. தற்போது சரத் வீரசேகரவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.
இதன்போது பதிலளித்த அமைச்சா் சரத் வீரசேகர, சுகாதாரத்துறையினா் வழங்கியுள்ள அறிவுறுத்தலின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலேயே பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தொிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா், உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னா் தமது தந்தை கூறியதை வெளியில் சொல்லாமைக்கான காரணமாகவே அந்த தாக்குதலை தடுக்கமுடியாமல் போனதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினாா்.
