அர்ச்சுனாவிற்கும் பிரதேச சபை பெண் உறுப்பினருக்கும் இடையே முற்றிய கடும் வாக்குவாதம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்குகின்ற பாணியில் சென்ற விடயமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம்(23.12.2025), ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
கடுமையான வாக்குவாதம்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் கூட்டமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரண்டு பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது குறித்த பெண் உறுப்பினர்கள் "நல்லூரை இடிக்கும்படி கூறினீர்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஐந்திற்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தில் நின்றபோதும் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri