இலங்கையில் மயில் உள்ள பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.
மயில்களில் இருந்து குறித்த நோய்த் தொற்று பரவுவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இந்த மாவட்டங்களில் உள்ள விவசாய பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது இந்த தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
