சர்வதேசத்தில் மூக்கறுக்கப்பட்ட ரணில்! சபையில் கிண்டலடித்த அர்ச்சுனா
சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூக்கறுக்கப்பட்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இன்றைய உரையில் சர்வதேச விசாரணைஈ ரணில் விக்ரமசிங்கவின் நிலை மற்றும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரங்க கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
சர்வதேச விசாரணை
“இனப்படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைபாடுகளுக்கு இதுவரை வருகைதந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனினும் தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சர்வதேச விசாரணையை புறக்கணித்திருப்பது கவலைக்குரியதே.
மேலும், 2009ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்றில் அங்கம் வகித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கங்களுடன் சேர்ந்து எங்கள் சமூகத்தை சீரழித்துள்ளனர்.
அந்த கட்சியில் சுமந்திரன் என்று ஒருவர் இருந்தார். தற்போது அக்கட்சி சார்பாக சிறீதரன் என்ற நபர் நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இவர்கள் அனைவரும் ரணிலுடன் சேர்ந்து எமது இனத்தை அளித்துள்ளனர். சர்வதேச விசாரணையை இழிவுபடுத்தியவர்களே இவர்கள்.
இதன் காரணமாகவே எங்கள் மக்கள் சுமந்திரனை புறக்கணித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு படுகொலை
உங்கள் அரசாங்கத்திடம் கேட்பது 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கான நீதியை மாத்திரம் அல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் சர்வதேச விசாரணை மிக அவசியம்.
நல்லாட்சி என்று ஒன்று வந்தது. அதன்பிறகு கோட்டாபய ராஜபக்ச ஆட்சி அமைத்தார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். இவர்கள் எவரும் எமது சமூகத்திற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.
அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊடக நேர்காணலில் கூட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யுத்தகாலத்தில் மருத்துவமைகள் தாக்கப்பட்டதை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அது மாத்திரம் அல்ல. படலந்த படுகொலை தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் கூட உங்கள் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் கூட ஒரு மனித உரிமை ரீதியிலான சர்வதேச குற்றச்சாட்டுக்கு உரித்தானவர். அவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவால் எவ்வாறு தமிழ் மக்கள் ஒன்று திரட்டப்பட்டு படுகொலை செய்யபட்டார்களோ, அதே போல இஸ்ரேலும் ஹமாஸுக்கு எதிராக செயற்படுவதாக அமெரிக்க தரப்பு தெரிவித்திருந்தது.
இதை ரணிலுடன் இடம்பெற்ற நேர்காணலின் ஒளிபரப்பாளர் பகிரங்கபடுத்தியிருந்தார். அவ்வாறென்றால் எமது தமிழ் இனம் அளிக்கப்பட்டமை இதன்மூலம் உறுதியாகிறது' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ Cineulagam

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
