யாழில் இடம்பெற்ற தொல்லியல் துறை கண்காட்சி
தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கோட்டையில் கிடைக்கப்பெற்ற மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தலும் ஆவணப்படுத்தலும் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சியினை இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் ரஞ்சா கொங்றிவிப் ஆரம்பித்து வைத்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி இடத்திற்கு யாழ்ப்பாணம் கோட்டையில் கிடைக்கப்பெற்ற மரபுரிமை சின்னங்களை ஆவணப்படுத்தல் மற்றும் காட்சிபடுத்தல் செயற் திட்டத்தின்கீழ் குறித்த கண்காட்சி கூடம் அன்றைய தினம் நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர், யாழ். மாவட்ட
அரசாங்க அதிபர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற வரலாற்று
துறைபேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ். மாநகர முதல்வர், தொல்பொருள்
திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயற்திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து
கொண்டனர்.









இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
