ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை
காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தயானந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று(26.09.2023)அவரை பிணையில் விடுவித்துள்ளது.
மட்டக்களப்பு கிராண் குளம் பகுதியில் கடந்த 20 வருடங்களாக விளையாட்டு கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி ஒன்றை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்தப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பெரும்பான்மை இனத்தவர் ஒருவரால் 20 வருடங்களுக்கு முன் விளையாட்டுக் கழக மைதானத்திற்காக குறித்த காணி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த காணியை அபகரித்துள்ளதாக கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபராக கருதப்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி முன்னாள் தவிசாளர் தயானந்தன், விளையாட்டுக்கழக காணிக்கு இடையூறாக உள்ளமையை நீதிமன்றுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எதிர்வரும் காலங்களில் குறித்த காணிக்குள் எவ்வித தலையீடும் செலுத்தக்கூடாது என்றும் ஏதாவது தலையீடு செய்தால் எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

7 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் புகலிடக்கோரிக்கையாளருக்கு 10,000 பவுண்டுகள் பிரசவ கட்டணம் News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
