யாழில் காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயற்சி - கொழும்பில் வெளியிடப்பட்ட தகவல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துறை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்க முடியுமாயின், பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சாதாரண இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் இலங்கை அரசாங்கம், கடந்த வருடத்திற்குள் கைது செய்யப்பட்ட சுமார் நூற்றிற்கும் மேற்பட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கோட்டா - மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் தகவலை வெளியிட்டிருந்தார்.
குறித்த செய்திகள் உள்ளிட்ட இன்னும் பல விரிவான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை தொகுப்பு,