கத்தார் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு அரபு நாடாளுமன்றம் கண்டனம்
கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு அரபு நாடாளுமன்றத் தலைவர் முகமது பின் அகமது அல்-யாமாஹி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று இரண்டு முக்கிய அரபு நாடுகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. கத்தாரின் கடல் எல்லைக்குள் ஒரு வணிகக் சரக்குக் கப்பல் இலக்கு வைக்கப்பட்டது.
இத்தாக்குதலால் கப்பலில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் வான்வெளியில் இன்று விடியற்காலையில் ஏராளமான ட்ரோன்கள் நுழைந்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரபு லீக்கின் (Arab League) சட்டமியற்றும் அமைப்பான அரபு நாடாளுமன்றம், இத்தாக்குதல்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அரபு நாடாளுமன்றத் தலைவர் முகமது பின் அகமது அல்-யாமாஹி இத்தாக்குதல்கள் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் நாடுகளின் இறையாண்மையை மீறும் செயலாகும் எனவும் இது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகப் பாதைகள் மற்றும் வான்வெளி பாதுகாப்பிற்கு இத்தகைய ட்ரோன் மற்றும் கப்பல் தாக்குதல்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan