சித்திரை புத்தாண்டு காலப்பகுதி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின் போது மக்கள் பாதுகாப்பாக பயணங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதோடு, மது போதையில் வாகனம் செலுத்துதல் முற்றாக தடை செய்யப்பட வேண்டியது எனவும் மன்னார் மாவட்ட தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி துரைநாயகம் ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பிறப்பு எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வருடமாக பிறக்க உள்ள நிலையில் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களாகிய நாங்கள் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அவதானமாக செயற்பட வேண்டிய விடயங்கள்
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுவாக மது அருந்தி விட்டு வாகனங்களை செலுத்துதல் அல்லது மது அருந்தி விட்டு வேறு இடங்களுக்கு பயணித்தல் மற்றும் பட்டாசு கொளுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் அவதானமாக செயல்பட வேண்டும்.
எனவே மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துவதை முற்றாக தவிர்த்து கொள்ள வேண்டும்.மேலும் பாதுகாப்பான வகையில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகள் கொளுத்த வேண்டும். புத்தாண்டையொட்டி விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை மாவட்டத்தில் முன்னெடுக்கின்ற போது மருத்துவக் குழுவுடன் இணைந்து முதலுதவி குழுவையும் இணைத்துக் கொண்டு குறித்த நிகழ்வுகளை நடத்துவது ஏற்புடையதாக இருக்கும்.
எனவே புத்தாண்டு நிகழ்வுகளை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து முன்னெடுக்கின்ற போது குறித்த விடயங்கள் குறித்து அனைவரும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
