யுகதனவி அமைச்சரவை பத்திரம்: ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஒப்புதல்
யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக கோவிட் - 19 தொற்று நிலைமை மற்றும் அதிபர் - ஆசிரியர் சம்பள பிரச்சினையின் தற்போதைய நிலை, கோவிட் - 19 தொற்றுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேற்கு மற்றும் கிழக்கு முனைய அபிவிருத்தி, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல், பொருட்களின் விலையேற்றம் மற்றும் இயற்கை விவசாயம் மற்றும் உரம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa), முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa), தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena), ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando), வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara), விமல் வீரவங்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Kammanbila), டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), காமினி லொகுகே (Gamini Lokuge), பந்துல குணவர்தன (Bandula Gunawardena) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage), ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena), கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella), நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) மற்றும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara), ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் (Sagara Kariyavasam), பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Tissa Vitharana), ஏ.எல்.எம்.அதாஉல்லா (A.L.M.Ataullah), டிரான் அலஸ் (Tiran Alas), வீரசுமன வீரசிங்க (Weerasumana Weerasinghe), கெவிந்து குமாரதுங்க (Kevindu Kumaratunga) உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam