சசிமகேந்திரனை மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்க ஒப்புதல்
யாழ்ப்பாணம் குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்துடன் நீதித்துறையில் பல புதிய நியமனங்களுக்கும் சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் அர்ஜூனா ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த பரந்துரைக்கு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சிசர டி அப்ரூ ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒபசேகர நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கிடையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரைாக நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கும் பேரவ ஒப்புதல் அளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னாண்டா நியமிக்கப்பட்டதன் மூலம் உருவான வெற்றிடத்தை நிரப்ப மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனை நியமிக்க நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டி அப்ரூ ஓய்வு பெற்றதன் மூலம் நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினருக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப உயர் நீதிமன்ற நீதியரசர தெஹிதெனியாவை நியமிக்க பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan