எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதினை தடுப்பதற்கான அணுகுமுறைகள் (Video)
நாட்டில் பல இடங்களில் தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்குள்ளாகுவதனை தடுப்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
தரம் குறைந்த உதிரிப்பாகங்களின் பயன்பாட்டால் அல்லது தவறான செயற்பாடுகளால் வீடுகளில் கசிவு ஏற்பட்டால் முதலில் துர்நாற்றம் வீசும் அந்த நேரத்தில் வீடுகளில் எந்த ஒரு மின் சாதனங்களையும் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
பின்னர் எரிவாயு சிலிண்டரை கழற்றி வீட்டின் வெளியே வைக்கவேண்டும்.
இப்படி கழற்றி வெளியே கொண்டு செல்லும் போது கொள்கலனை சாய்க்காமல் நேராக நிலைக்குத்தாக பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.
வெளியே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் கொண்டு சென்று வைக்கவேண்டும்.
எரிவாயு சிலிண்டர் வெளியே வைக்கப்பட்ட இடத்தின் அருகில் யாரையும் செல்ல அனுமதிக்கவேண்டாம்.
காரணம் அந்த இடத்திற்கு தொலைபேசியுடன் ஒருவர் சென்றால் கூட அது ஆபத்தானது.
ஆகவே யாரையும் அந்த இடத்திற்கு அனுமதிக்காது உடனே சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்புகொண்டு அவர்களுக்கு விடயத்தை சொல்லி தெளிவுபடுத்தவேண்டும்.
அதன் பின்னர் அவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவுபடுத்துவார்கள்.
நீங்கள் முதலில் செய்யவேண்டியது மின்சாரத்துடன் தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
அடுத்தது எரிவாயு சிலிண்டரை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு நேராக தூக்கிச்சென்று வைப்பது இப்படி செய்வதால் வெளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
