இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமனம்
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்ற எளிமையான நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துடனான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய மிலிந்த மொரகொட, இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கும், இலங்கை-இந்திய உறவுகளை புதிய இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு குழுவாக, பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், தனது கொள்கை கட்டமைப்பை அங்கு அறிவித்தார்.
இலங்கையின் இராஜதந்திர ஒருங்கிணைந்த நாட்டு வியூகம் 2021/2023" என்று, அதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது உயர்ஸ்தானிகர் ஆவார்.