தேர்தல் ஆணைக்குழு, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
நாட்டின் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் குறித்த நியமனங்கள் செய்யப்படவுள்ளன.
அரசியலமைப்பு பேரவை நாளை (25.01.2023) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
9 உறுப்பினர்கள் நியமனம்
இதன்போது, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு இதுவரை 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சி அல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு, நாளைய தினம் கூடவுள்ள அரசியலமைப்பு சபையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இவ்வாறு பல ஆணைக்குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்க வேண்டும்.
இதன்படி, தேர்தல், எல்லை நிர்ணயம், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு சேவைகள், நிதி, கொள்வனவு, மனித உரிமைகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் : சிவா மயூரி

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
