ஜனாதிபதி தேர்தலுக்கான நியமனங்கள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்களைக் கையேற்கும் வேலைத்திட்டம் குறித்து தேர்தல் ஆணையம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த நியமனங்கள் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தல் ஆணைக்குழு சார்பாக ஆணைக்குழுவின் தவிசாளரினாலும் அதன் உறுப்பினர்களினாலும் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் 2024.08.15ஆம் திகதி முற்பகல் 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையான காலப்பகுதிக்குள் நியமனப்பத்திரங்கள் கையேற்கப்படும்.
ஆட்சேபனைகள்
மேலும், வேட்பாளர் ஒருவரின் அல்லது வேட்பாளர்களின் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுக்கு 15ஆம் திகதி மு.ப. 9.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் எழுத்திலான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும்.
அதேவேளை,15 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அலுவலக வளவினுள் பிரவேசிப்பதற்கு குறிப்பிட்ட சில நபர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri