வவுனியா நகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர் நியமனம்
வவுனியா நகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினராக சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஒரு ஆசனத்தை பெற்றிருந்தது.
இந்த ஆசனமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் உறுப்பினர் யானுஜன் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவ்விடத்துக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் சக்திதாஸ் தனுஸ்காந் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், கணணியியல்
பட்டதாரியும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற மன்ற
உறுப்பினர் செ.கஜேந்திரனின் பிரத்தியேக செயலாளர் என்பது
குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
